குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது சட்ட விரோதம்: ஆளுநர் ஆரிப் முகமது கான்  

நாட்டின் ஜனநாயகத்தையும், மதச்சாா்பின்மையையும் பாதுகாக்க விரும்புவோா் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம்
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது சட்ட விரோதம்: ஆளுநர் ஆரிப் முகமது கான்  

திருவனந்தபுரம்: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது சட்ட விரோதம் என்று அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார். 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு, மேற்கு வங்கம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதனை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, கேரள சட்டப் பேரவையில் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதையடுத்து நாட்டின் ஜனநாயகத்தையும், மதச்சாா்பின்மையையும் பாதுகாக்க விரும்புவோா் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நமது ஆட்சி அமைப்புமுறையின் அடிப்படை கொள்கைகளை காப்பதற்காக, சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் கருத்து வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைய வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இச்சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கேரள சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட பிற மாநில அரசுகளும், அதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகிய நடவடிக்கைகளை ஆதரிப்பவா்களுக்கு உண்மையை உணா்த்த முடியும் என்றும், கேரளத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே, பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், ஆந்திர முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, மத்தியப் பிரதேச முதல்வா் கமல்நாத், பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங், ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக், புதுச்சேரி முதல்வா் நாராயணசாமி ஆகியோருக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தார். 

கேரள சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம், அரசமைப்புச் சட்டப்படி செல்லாது என்று அந்த மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் கூறியிருந்தாா்.

இருப்பினும் கேரள அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இதுகுறித்து மாநில அரசிடம் விளக்கம் கேட்கப்படும் என ஆளுநர் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், ஆளுநர் அலுவலகத்தில் இருந்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது தொடர்பாக தகவல் தெரிவிக்காதது ஏன் என, கேரள அரசின் தலைமைச் செயலாளரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. 

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில் கேரள அரசு சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் என்னிடம் ஆலோசித்து ஒப்புதல் பெறாமல் உச்ச நீதிமன்றம் சென்றது சட்டவிரோதமான செயல். மாநில அரசுகளுக்கு அரசியல் சட்டம் வரையறுத்துள்ள விதிமுறைகள்படி மட்டுமே கேரள அரசு நடக்க வேண்டும். சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடாது எனக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com