இந்தியாவுக்கு எதிராக பதிலடி கொடுக்கும் அளவுக்கு நாங்கள் பெரிய நாடு இல்லை: மலேசிய பிரதமர்மகாதீர் முகம்மது
By DIN | Published On : 20th January 2020 07:28 PM | Last Updated : 20th January 2020 07:28 PM | அ+அ அ- |

லங்காவி: பாமாயில் இறக்குமதியை நிறுத்தும் இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் அளவுக்கு நாங்கள் பெரிய நாடு இல்லை என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.
மலேசிய பிரதமர் மகாதீர் முகமது அண்மையில் காஷ்மீர் விவகாரம் மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்தவர், இது மிகவும் நியாயமற்றது என தான் நம்புவதாகக் கூறினார்.
இதற்கு இந்திய தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்தியாவின் இறக்குமதி தடையால் மலேசியாவுக்கு பொருளாதார ரீதியாக அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாமாயில் 2.8 சதவீதமாக உள்ளது. மொத்த ஏற்றுமதியில் 4.5 சதவீதம் பாமாயில் பங்களிப்பு உள்ள நிலையில், கடந்த வாரம் மட்டும் கிட்டத்தட்ட 10 சதவீதம் சரிந்துள்ளது, இது கடந்த 11 ஆண்டுகளில் வார ஏற்றுமதியில் நிகழ்ந்துள்ள மிகப்பெரிய சரிவாகும்.
மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கான இந்தியாவின் நடவடிக்கை, உலகின் இரண்டாவது மிகப்பெரிய சமையல் எண்ணெய் உற்பத்தியாளரான மலேசியாவுக்கு பெரும் சவாலை சந்திக்கும் நிலையை உருவாக்கி உள்ளது. ஏனெனில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தியா, மலேசியாவின் மிகப்பெரிய பாமாயில் சந்தையாக இருந்து வந்துள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக பாதிப்பை சந்தித்து வரும் மலேசியாவுக்கு, தென்கிழக்கு ஆசிய நாட்டில் புதியதாக பாமாயில் இறக்குமதி செய்பவர்களைக் கண்டுபிடிப்பதில் பெரும் சவாலாக உள்ளது.
இந்நிலையில், மலேசியாவின் மேற்கு கடற்கரையின் ஒரு ரிசார்ட் தீவான லங்காவியில் செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது, "பாமாயில் இறக்குமதியை நிறுத்தும் இந்தியாவின் நடவடிக்கைக்கு, சிறிய நாடான எங்களால் பதிலடி கொடுக்க இயலாது" என்று கூறினார். "மேலும் அதனை சமாளிப்பதற்கான வழிகளையும் ஆராய்ந்து வருவதாகவும் கூறினார்.
பண மோசடி மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்களால் சர்ச்சைக்குள்ளான இந்திய இஸ்லாமிய போதகர் ஜாகீர் நாயக் மீது இந்திய அரசு ஒரு நியாயமான விசாரணைக்கு உத்தரவாதம் அளித்தாலும், நடவடிக்கையின் உண்மையான அச்சுறுத்தலை நாயக் எதிர்கொள்கிறார். சுமார் மூன்று ஆண்டுகளாக மலேசியாவில் வசித்து வரும் அவர், பாதுகாப்பாக இருக்க மூன்றாவது நாட்டைக் கண்டுபிடிக்க முடிந்தால் மட்டுமே மலேசியா, ஜாகீர் நாயக்கை இடமாற்றம் செய்யோம் என கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...