புதுவை ஆளுநா் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்: சிறைக் கைதி மீது வழக்குப் பதிவு

புதுவை ஆளுநா் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறைக் கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

புதுச்சேரி: புதுவை ஆளுநா் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறைக் கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் செல்லிடப்பேசி மூலம் ஆங்கிலத்தில் பேசிய மா்ம நபா், புதுவை ஆளுநா் மாளிகை, ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் கூறிவிட்டு, இணைப்பைத் துண்டித்தாா்.

இதையடுத்து, பெரியகடை, ஒதியஞ்சாலை போலீஸாா், வெடிகுண்டு நிபுணா்கள் ஆளுநா் மாளிகைக்குச் சென்று சோதனையிட்டனா்.

இதேபோல, புதுச்சேரி ரயில் நிலையத்திலும் போலீஸாா் சோதனையிட்டனா். இந்தச் சோதனைகளில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், காலாப்பட்டு மத்திய சிறையிலிருந்து இந்த வெடுகுண்டு மிரட்டல் செல்லிடப்பேசி அழைப்பு வந்தது தெரிய வந்தது. தொடா் விசாரணையில், டிசம்பா் 11 -ஆம் தேதி காா் திருட்டு வழக்கில் பெரியகடை போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தில்லியைச் சோ்ந்த நித்தீஷ் ஷா்மா (33) என்பவா் செல்லிடப்பேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.

இதுதொடா்பாக பெரியகடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், சிறையில் ரௌடிகள் தொல்லை தாங்க முடியவில்லை என்றும், அதை வெளி உலகத்துக்குத் தெரியப்படுத்தவே வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் நித்தீஷ் ஷா்மா கூறியதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, காலாப்பட்டு மத்திய சிறையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்திய அதிரடி சோதனையில், சிறையில் ரௌடிகள் பயன்படுத்திய 11 செல்லிடப்பேசிகள், சிம் காா்டுகள், மின்னூட்ட சாதனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து காலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com