பத்ம விருதுகள் அறிவிப்பு: தமிழகத்தின் மாற்றுத்திறனாளி சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு விருது

நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் 71 குடியரசு தினத்துக்கு முந்தைய தினமான இன்று சனிக்கிழமை
பத்ம விருதுகள் அறிவிப்பு: தமிழகத்தின் மாற்றுத்திறனாளி சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு விருது

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட 12 பேருக்கு தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கௌரவிக்க இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.

நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் 71-வது குடியரசு தினத்துக்கு முந்தைய தினமான இன்று சனிக்கிழமை (ஜனவரி 25) அறிவிக்கப்பட்டன.

ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக சேவை, ஆன்மிகம், கலை, மருத்துவம், இலக்கியம், பொறியியல், கல்வி, விளையாட்டு, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருதுகள் அளிக்கப்படுகின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த அமர் சேவா சங்கத்தின் நிறுவனர் மாற்றுத்திறனாளி சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணன், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சமூக சேவகர் ஜெகதீஷ் லால் அவுஜா, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சமூக சேவகர் முகமது ஷரீஃப், கேரளாவை சேர்ந்த பொம்மலாட்ட கலைஞர் மூழிக்காள் பங்கஜாக்சி, ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி அளித்த கர்நாடக பழ வியாபாரி ஹரேகலா ஹஜப்பா ஆகியோர் என 118 பேர் பத்மஸ்ரீ விருதுக்கும், 7 பேர் பத்ம வி​பூஷண் விருதுக்கும், 16 பேர் பத்ம பூஷண் விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

பத்ம வி​பூஷண் ​விருது(7) 
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்களான அருண் ஜேட்லி(தில்லி), சுஷ்மா ஸ்வராஜ்(தில்லி), ஜார்ஜ் பெர்னாண்டஸ்(பிகார்) ஆகியோருக்கு பொது விவகாரங்கள் பிரிவில் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது இறப்புக்கு பிந்தைய விருதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.  விளையாட்டுப் பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமு(மணிப்பூர்), கலைப்பிரிவில் ஸ்ரீ ஜன்னுலால் மிஸ்ராச(உத்தரப்பிரதேசம்), பொது விவகாரங்கள் பிரிவில் மொரீஷியஸை சேர்ந்த சர் அனிரூட் ஜகநாநத் ஜி.சி.எஸ்.கே சமீபத்தில் காலமான உடுப்பி பெஷாவர் ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்தர் சுவாமி (ஆன்மிகம்) உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம பூஷண் விருது(16) 
விளையாட்டுப் பிரிவில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து(தெலங்கானா), வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் தமிழக தொழிலதிபர் டிவிஎஸ் வேணு சீனிவாசன், தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்,
கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர், மேற்கு வங்க மாநில ஸ்ரீ அஜோய் சக்ரவர்த்தி,  ஸ்ரீ மனோஜ் தாஸ், குஜராத் மாநில ஸ்ரீ பால்கிருஷ்ண தோஷி, தொழில் துறையை சேர்ந்த ஆனந்த் மகேந்திரா(மகாராஷ்டிரா), ஸ்ரீ முசாபர் உசேன்(ஜம்மு-காஷ்மீர்), ஸ்ரீ மனோஜ் தாஸ், ஸ்ரீ அஜோய் சக்ரவர்த்தி (மேற்கு வங்கம்),  ஸ்ரீ அனில் பிரகாஷ் ஜோஷி(உத்தரகண்ட்), ஸ்ரீ நீலகாந்த ராமகிருஷ்ணா மாதவா மேனன் (கேரளா), புதுச்சேரியை சேர்ந்த மனோஜ் தாஸ், வி.கே. முனுசாமி கிருஷ்ண பக்தர், பேராசிரியர். ஜெகதீஷ் ஷெத் (அமெரிக்கா) உள்ளிட்ட 16 பேருக்கு பத்மபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்மஸ்ரீ விருது(118)
* 14 ஆயிரம் சிறப்பு குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றிய தமிழகத்தைச் சேர்ந்த அமர் சேவா சங்க நிறுவனர் எஸ்.ராமகிருஷ்ணன்.

* பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், இயக்குநர் கரண் ஜாகர், தயாரிப்பாளர் ஏக்தா கபூர்

* கலைப்பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கலீ ஷபி மஹபூப், ஷேக் மஹபூப் சுபானி

* தமிழகத்தில் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சிறந்து விளங்கிய பிரதீப்

* கேரளாவை சேர்ந்த பொம்மலாட்ட கலைஞர் மூழிக்காள் பங்கஜாக்சி

* ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி அளித்த கர்நாடக பழ வியாபாரி ஹரேகலா ஹஜப்பாவு

* பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சமூக சேவகர் ஸ்ரீ ஜெகதீஷ் லால் அகுஜா

* உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சமூக சேவகர் முகமது ஷரீஃப். இவர், உறவினர்கள் அல்லாத 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சடலங்களுக்கு இறுதிசடங்கு செலவுகளை செய்துள்ளார். 

* அசாமில் யானைகளுக்கு மருத்துவ சேவையாற்றி வரும் கால்நடை மருத்துவர் குஷால் கன்வார் .

* குறைந்த செலவில் மருத்துவ சேவை புரிந்துவரும் மேற்குவங்க மருத்துவர் அருனோடே மண்டல்.

* மராட்டியத்தில் நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்டு வரும் பப்பட்ராவ் பவார்.

* மேற்கு வங்க மாநிலத்தில் குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை அளிக்கும் அருனாடே மண்டல்.

* கலைத்துறை பிரிவில் சாசாதார் ஆச்சார்யா.

* மருத்துவ சேவை பிரிவில் உத்தரகண்ட்டில் மாநிலத்த்தைச் சேர்ந்த யோகி ஆரோன்.

* வர்த்தகம் மற்றும் தொழில்துறை பிரிவில் தில்லியைச் சேர்ந்த ஜெய் பிரகாஷ் அகர்வால்.

* இலக்கியம் மற்றும் கல்விப் பிரிவில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த  காஸி மாசூம் அக்தர்.

* இலக்கியம் மற்றும் கல்விப்பிரிவில் பிரேசில் தேர்ந்த குளோரியா அரைரா.

* கலைத்துறை பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கலீ ஷபி மஹபூப், ஷேக் மஹபூப் சுபானி.

* மகாராஷ்டிரா விளையாட்டுத் துறையைச் சேர்ந்த கான் ஜாகீர் கான்.

* உத்தரப்பிரதேச மாநிலத்தில் மருத்துவ சேவை புரிந்துவரும் பத்மாவதி பண்டோபத்யாய்.

* மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவ சேவை புரிந்துவரும் சோவன் பானர்ஜி

* சண்டிகர் மாநில மருத்துவ சேவை புரிந்துவரும் திகம்பர் பெஹரா

* ஒடிசா மாநில இலக்கியம் மற்றும் கல்வி தமயந்தி பெஸ்ரா 

* ராஜஸ்தான் மாநில சமூக சேவகர் ஹிமத்தா ராம் பாம்பூஊ

* வர்த்தகம் மற்றும் தொழில் துறை பிரிவில் உத்தரப்பிரதேச மாநில சஞ்சீவ் பிக்சாந்தனி

* வர்த்தகம் மற்றும் தொழில் துறை பிரிவில் குஜராத் மாநில காபூர்பாய் எம்.பிலாக்கியா

* பொது விவகாரம் பிரிவில் இங்கிலாந்தைச் சேர்ந்த பாப் பிளாக்மென்

* கலைத்துறையில் அசாம் மாநில இந்திரா பிபி போரா 

* கலைத்துறையில் சத்தீஸ்கர் மதன் சிங் சவுகான்

* சமூக சேவைத் துறையில் ராஜஸ்தான் உஷாசவுமர்

* இலக்கியம் மற்றும் கல்வி பிரிவில் அசாம் மாநில ஸ்ரீ லில் பகதூர் செட்ரி 

மேலும் தமிழகத்தை சேர்ந்த லலிதா, சிதம்பரம் சரோஜா மனோகர் தேவதாசுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com