காரைக்குடி:  கரோனா சிகிச்சை முடிந்து செல்வோருக்கு சித்த மருந்து பெட்டகம்

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா சிகிச்சை முடிந்து செல்வோருக்கு ஆரோக்கியம் சிறப்புத் திட்டத்தின் கீழ் சித்த மருந்து பெட்டகம் வழங்கி வீட்டில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுரை
கரோனா சிகிச்சை முடிந்து செல்வோருக்கு ஆரோக்கியம் சிறப்புத் திட்டத்தின் கீழ் சித்த மருந்து பெட்டகம்
கரோனா சிகிச்சை முடிந்து செல்வோருக்கு ஆரோக்கியம் சிறப்புத் திட்டத்தின் கீழ் சித்த மருந்து பெட்டகம்

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா சிகிச்சை முடிந்து செல்வோருக்கு ஆரோக்கியம் சிறப்புத் திட்டத்தின் கீழ் சித்த மருந்து பெட்டகம் வழங்கி வீட்டில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.    

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிவகங்கை பழைய மருத்துவமனை, காரைக்குடி அருகே அமராவதிபுதூர் பகுதி சோமநாதபுரம் டி.பி மருத்துவமனை (சானி டோரியம்) ஆகிய மூன்று இடங்களில் கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக கொவைட் - 19 ஆரோக்கியம் சிறப்புத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  

சோமநாதபுரம் சானி டோரியம் கரோனா வார்டில் 44 தனித்தனி படுக்கை வசதியுடன் கூடிய சிகிச்சை கடந்த ஜூன் 23-ஆம் தேதி தொடங்கியது. தற்போது 37 நோயாளிகள் தங்கி சிசிச்சை பெற்று வருகின்றனர். ஜூன் 23 - 27-ஆம் தேதி வரை 25 பேர் வரை சிகிச்சை முடிந்து சென்றதாக ஆயுஷ் மருத்துவர் ப்ரீத் தெரிவித்தார். 

மேலும் அவர் சனிக்கிழமை  கூறியதாவது: தற்போது 37 நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். அவர்களுக்கு அலோபதி மருந்துகளுடன் சித்தா, யோகா மற்றும் நேச்சுரோபதி மருந்துகளும் இணைந்து வழங்கப்படுகிறது. மேலும் மனநல மருத்துவரின் ஆலோசனையும் தனித் தனியாக வழங்கப்படுகிறது. 

சரிவிகித உணவு, பயறு வகைகள், சூப், முட்டை போன்ற சத்தான உணவுகள் வழங்கப்படுகிறது. யோகா மருத்துவரால் மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி தினமும் அளிக்கப்படுகிறது. வியாழன், வெள்ளிக்கிழமைகள் மட்டும் 10 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். இன்று ஒருவருக்கு சிகிச்சை முடிந்துள்ளது.  சித்த மருந்துகளான கபசுரக்குடிநீர் காலை, மாலை இரண்டு வேளையும் கொடுக்கப்படுகிறது. மதியம் துளசி, அதிமதுரம், சுக்கு, மிளகு, மஞ்சள் கலந்த புத்துணர்வு தரக்கூடிய சூப் கொடுக்கப்படுகிறது.  

இது தவிர நோயாளிகள் தொற்றிலிருந்து விடுபட்டு வீட்டிற்குச் செல்லும் போது ஆரோக்கிய சித்த மருந்து பெட்டகமாக அமுக்ரா சூரணம் மாத்திரை, நெல்லிக்காய் லேகியம் போன்றவை உடல் பலத்தை கூட்டவும், மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ரத்த விருத்தி உடலை தேற்றும் மருந்துகளை மருத்துவர்கள் சிவகுமார், செங்கதிர் ஆகியோர் தலைமையில் கொடுத்து அனுப்பப்படுகிறது. யோகா மருத்துவர் பிரபு, ஆயுஷ் மருத்துவர் பெல்வின் கேண்டிடா ஆகியோருடனும் இப்பணியை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com