குடிமராமத்து பணி: பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆய்வு
By DIN | Published On : 19th July 2020 11:36 AM | Last Updated : 19th July 2020 11:36 AM | அ+அ அ- |

குடிமராமத்து பணிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்திய பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர்
ஸ்ரீபெரும்புதூர்: வெங்காடு, கொளத்தூர் மற்றும் மாகான்யம் சிற்றேரிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை பொதுப்பணித்துறையின் வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரா பிரிவின் தலைமை பொறியாளர் தனபால் கடந்த சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள வெங்காடு, கொளத்தூர் மற்றும் மாகான்யம் சித்தேரிகளில் ரூ1.30 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. குடிமராமத்து பணிகள் பணிகள் நடைபெறும் இந்த ஏரிகளில் புதிதாக மதகுகள், கலங்கள்கள் அமைக்கப்பட்டு வருவதோடு ஏரிக்கரையை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், வெங்காடு, கொளத்தூர் மற்றும் மாகான்யம் சித்தேரி ஆகிய ஏரிகளில் நடைபெற்று வரும் குடிமராம்தது பணிகளை பொதுப்பணித்துறையின் வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதார பிரிவின் தலைமை பொறியாளர் தனபால் கடந்த சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடத்தி பணிகளை விரைந்து முடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க பிரிதிநிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பொதுப்பணித்திலகம், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், இளம் பொறியாளர் மார்கண்டன், விவசாய சங்க நிர்வாகிகள் வெங்காடு உலகநாதன், கொளத்தூர் வரதன், மாகான்யம் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.