பொது முடக்கம்: தேனியில் வெறிச்சோடிய சாலைகள்
By DIN | Published On : 19th July 2020 12:15 PM | Last Updated : 19th July 2020 12:15 PM | அ+அ அ- |

வெறிச்சோடிக் காணப்படும் சாலைகள்
தேனியில் 3 -ஆம் கட்ட பொது முடக்கத்தை முன்னிட்டு வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டமின்றி ஞாயிற்றுக்கிழமை சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
மாவட்டத்தில் இம் மாதம் 3-ஆம் கட்டமாக முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேனியில் பொது முடக்கத்தை முன்னிட்டு வாகனப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் மற்றும் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டுகிறது.
மருந்துக் கடைகள், பால் விற்பனை நிலையம் மற்றும் ஒரு சில மருத்துவமனைகள் மட்டும் திறந்திருந்தன.
நகர எல்லை மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவசரத் தேவைகளுக்காக செல்வோரின் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
நாளை(திங்கள்கிழமை) காலை 6 மணி வரை முழு பொதுமுடக்க கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று காவல் துறையினர் கூறினர்.