

தூத்துக்குடி மாவட்டத்தில் முழு பொதுமுடக்கம் காரணமாக சாலைகள் அனைத்தும் வெறிச்சோடியது.
தமிழகம் முழுவதும் ஜூலை மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு பொதுமுடக்கம் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் படி தமிழகம் முழுவதும் ஜூலை மாத 3வது ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு பொதுமுடக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் முழு பொதுமுடக்கம் கடைபிடிக்கப்பட்டுள்ளதால் அனைத்து கடைகள் மற்றும் தினசரி சந்தைகள், மீன் மார்கெட், இறைச்சி கடைகள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டு சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.