இந்திய-நேபாள எல்லைப் பிரச்னை விரைவில் பேசி முடிக்கப்படும்

நேபாளம் மற்றும் இந்தியா இடையிலான உறவை மனதில் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னை விரைவில் சுமூகமாக பேசி முடிக்கப்படும் என பா.ஜ.க வின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜய் தம்தா தெரிவித்தார்.
இந்திய-நேபாள எல்லைப் பிரச்சனை விரைவில் பேசி முடிக்கப்படும்

கடந்த ஜூலை 21 ம் தேதி நேபாள குடிமக்கள் இந்தியப் பகுதிக்குள் வந்து தோட்ட வேலைகளை மேற்கொண்டதாக இந்தியப் பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதை அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர்.

இது குறித்து தம்தாவிடம் எழுப்பிய கேள்விக்கு அவர் கூறுகையில், 

தனக்பூர் எல்லையில் நேபாள மக்கள் ஊடுருவியது குற்றமாகும். இந்திய அரசு நிறுவனங்கள் தொடர்ந்து எல்லை பகுதியை கண்காணித்து வருகிறார்கள். 

நேபாளத்துடனான நெருங்கிய பாரம்பரிய மிக்க உறவுகளை மனதில் கொண்டு தேசிய நலனுக்கான சுமூகமாக தீர்வு விரைவில் பேசி முடிக்கப்படும் என்று தம்தா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com