காரைக்குடி: கோவில்களை திறக்கக் கோரி இந்து முன்னணியினர் நூதனப் போராட்டம்

கோவில்களை திறக்கக் கோரி காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில், குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோவில் முன்பு ஒற்றைக் காலில் நின்று இந்து முன்னணியினர் நூதனப் போராட்டம் நடத்தினர்.
காரைக்குடி: கோவில்களை திறக்கக் கோரி இந்து முன்னணியினர் நூதனப் போராட்டம்

காரைக்குடி: கோவில்களை திறக்கக் கோரி காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில், குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோவில் முன்பு ஒற்றைக் காலில் நின்று நூதன முறை போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்து முன்னணியினர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தில்  தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீ னக் கோவிலான சண்முக நாதப் பெருமான் கோவில்கள் முன்பாக புதன்கிழமை தமிழக அரசு கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர்ஒற்றைக்காலில் நின்று நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

கரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24 முதல் பொது முடக்கம் நடைமுறைபடுத்தப்பட்டது. அன்று முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்கள், இந்து கோவில்கள் மூடப்பட்டு ஆகம விதிகளின்படி பூஜைகள் மட்டும் நடத்த அனுமதியளிக்கப்பட்டன. அன்று முதல் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதோடு கோவில்களில் பக்தர்களும் அனுமதிக்கப்பட வில்லை. 

தற்போது மத்திய அரசு வழிபாட்டுத்தலங்களை கடந்த ஜூன் 8 திங்கள் கிழமை முதல் திறக்க அனுமதியளித்தது. ஆனால் தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் தொடர்பாக தமிழக அரசு வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதிக்கவில்லை. 

இந்த நிலையில் தமிழக அரசு கோவில்களை திறக்கச் சொல்லி இந்து முன்னணியினர் ஒற்றைக்காலில் நின்று  நூதன முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு  இந்து முன்னணி சிவகங்கை மாவட்டப் பொதுச் செயலாளர் அக்னி பாலா தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜெயபால், மாவட்ட செயலாளர் கணேசன், அஜய் மற்றும் இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com