போலி இ- பாஸ் மூலம் வருபவர்கள் மீது வழக்கு: திருப்பத்தூர் ஆட்சியர் எச்சரிக்கை

வெளி மாவட்டங்களில் இருந்து போலி இ- பாஸ் மூலம் வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும்
போலி இ- பாஸ் மூலம் வருபவர்கள் மீது வழக்கு: திருப்பத்தூர் ஆட்சியர் எச்சரிக்கை


திருப்பத்தூர்: வெளி மாவட்டங்களில் இருந்து போலி இ- பாஸ் மூலம் வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ம.ப. சிவன் அருள் எச்சரித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர் சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்டவர் கூறியாதாவது:  திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 எல்லைப்பகுதிகளில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  வெளி மாவட்டங்களில் இருந்து போலி இ - பாஸ் மூலம் வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும்.

இ- பாஸ் இல்லாமல் வருபவர்கள் மாவட்ட எல்லையிலேயே திருப்பி அனுப்பப்படுவார்கள் என அவர் கூறினார். ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம் உடன் இருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com