ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் நிரந்தரமற்ற உறுப்பினர் தேர்தலில் இந்தியா வெற்றி

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் இந்தியா போட்டியின்றி தேர்வாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் நிரந்தரமற்ற உறுப்பினர் தேர்தலில் இந்தியா வெற்றி

நியூயார்க் : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் இந்தியா போட்டியின்றி தேர்வாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்பாக கருதப்படுவது பாதுகாப்பு சபை.  இது 5 நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களைக் கொண்டது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளது. இவை தவிர நிரந்தரமற்ற உறுப்பினர்களாக 10 நாடுகள் இருந்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பொதுச் சபை இரண்டு நிரந்தரமற்ற ஐந்து உறுப்பினர்களை இரண்டு ஆண்டு காலத்திற்கு சுழற்சி முறையில் தேர்வு செய்கிறது. 

ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கு ஐந்து; கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஒன்று; லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளுக்கு இரண்டு; மற்றும் மேற்கு ஐரோப்பிய மற்றும் பிற நாடுகளுக்கு இரண்டு என ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை.

அந்த வகையில், 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான தற்போது காலியாக உள்ள 5 நாடுகளுக்கான தேர்தல் ஐ.நா. தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆசிய -பசிபிக் பிராந்தியம் சார்பில் இந்தியா போட்டியிட்டது. வேறு எந்த நாடும் போட்டியிடாத நிலையில், இந்தியா வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 192 உறுப்பினர்களை கொண்ட பாதுகாப்பு சபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை 128 ஆகும். இதில் 184 நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாகவும், 113 நாடுகள் கென்யாவுக்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளன. கனடா தோல்வியடைந்தது.

ஐ.நா. பாதுகாப்பு குழுவின் நிரந்தரமற்ற உறுப்பினராக 1950-1951, 1967-1968, 1972-1973, 1977-1978, 1984-1985, 1991-1992 மற்றும் 2011-2012 ஆம் ஆண்டுகளிலும், தற்போது 2021-2022 ஆம் ஆண்டுக்கு என இந்தியா 8-ஆவது முறையாக நிரந்தரமற்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் 2 ஆண்டுகளுக்கு இந்தியா ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தரமற்ற உறுப்பினராக இருக்கும்.

இந்தியாவுடன், அயர்லாந்து, மெக்ஸிகோ மற்றும் நார்வே ஆகிய நாடுகளும் வெற்றி பெற்றன. 

இதனிடையே, தெற்காசிய மண்டலத்தில் அமைதி, பாதுகாப்பு, பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்று திரளுதல்  நிதி அளிப்பதை தடுத்தல் போன்ற முக்கிய திட்டங்களை இந்தியா ஐ.நா. பாதுகாப்பு சபையின் முன் வைக்கப்பட்டிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கள் தெரிவித்துள்ளார்.

இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய பொறுப்பில் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com