கொழும்பு தூதரகத்தின் ஆணையர் உதவியோடு 170 இந்தியர்கள் விமானம் மூலம் கோவை வருகை

கொழும்பு தூதரகத்தின் ஆணையர் உதவியோடு தாயகம் திரும்பிய 145 கப்பல் மாலுமிகள் உள்ளிட்ட 170 இந்தியர்கள் விமானம் மூலம் கோவை வந்தனர்.
கொழும்பு தூதரகத்தின் ஆணையர் உதவியோடு 170 இந்தியர்கள் விமானம் மூலம் கோவை வருகை

கொழும்பு தூதரகத்தின் ஆணையர் உதவியோடு தாயகம் திரும்பிய 145 கப்பல் மாலுமிகள் உள்ளிட்ட 170 இந்தியர்கள் விமானம் மூலம் கோவை வந்தனர்.

இந்தியா முழுவதும் கரொனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மார்ச் 24 ஆம் தேதி முதல் ஜீன் 31 ஆம் தேதி வரை அனைத்து போக்குவரத்தும் முடக்கப்பட்டது. 

இதனால் வெளிநாடுகளில் சிக்கித்தவித்து வரும் இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். 

இந்நிலையில், மத்திய அரசு மே 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானங்கள் இயங்க கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்தது. இதனைத்தொடர்ந்து வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் 4.5 லட்சம் பேர் இந்தியா திரும்ப மத்திய அரசின் ' வந்தே பாரதம் ' திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார்கள். 

இதில் 2.5 லட்சம் இந்தியர்கள் இன்று வரை நாடு திரும்பியுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் கொழும்பிலிருந்து 145 கப்பல் மாலுமிகளுடன் 170 இந்தியர்கள் கோவை விமான நிலையத்திற்கு நள்ளிரவு 12 மணிக்கு வந்தனர். சென்னையில்  தரையிரங்க வேண்டிய விமானம்,  ஊரடங்கு காரணமாக கோவை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

இந்த விமானத்தில் எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக ஸ்ரீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு 14 மாதங்கள் சிறையில் இருந்த மீனவர், விசா முடிந்து ஸ்ரீலங்காவில் தங்கியிருந்தவர்கள், சுற்றுலா சென்றவர்கள் என 25 பேரும் தூதரக அதிகாரிகளின் முயற்சியால் நாடு திரும்பினர்.

மேலும்  பல்வேறு நாடுகளின் கப்பல்களில் மாலுமிகளாக பணியாற்றி ஸ்ரீலங்காவிற்கு வந்து சேர்ந்த 145 பேரும் தனியார் சிறப்பு விமானத்தில் கோவை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். ஆந்திரம், கர்நாடகம், அந்தமான், தமிழ்நாடு, கேரளம் மற்றும் வட மாநிலத்தை சேர்ந்த மாலுமிகள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க இருக்கின்றனர்.

170 பேரும் இந்தியா திரும்ப உதவிய கொழும்பு தூதரக அதிகாரிகள் மற்றும் மத்திய அரசுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com