சிறையில் தந்தை, மகன் மரணம்: பொதுமக்கள் சாலை மறியல்

சாத்தான்குளத்தில் காவல்துறையினர் தாக்கியதில் காயமடைந்த தந்தை, மகன் மரணமடைந்தனர். 
சிறையில் தந்தை, மகன் மரணம்: பொதுமக்கள் சாலை மறியல்

சாத்தான்குளத்தில் காவல்துறையினர் தாக்கியதில் காயமடைந்த தந்தை, மகன் மரணமடைந்தனர். 

சாத்தான்குளம் அரசடி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (58), மகன் பென்னிக்ஸ் (31). இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். மரக்கட்டை வியாபாரம் நடத்தி வந்தார். கடந்த 19ஆம் தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தது தொடர்பாக காவல்துறையினர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று உள்ளனர். காவல் நிலையத்தில் பென்னிக்ஸ் முன் அவரது தந்தை ஜெயராஜை காவல்துறையினர் அடித்ததாக கூறப்படுகிறது.

இதனை தட்டி கேட்ட பென்னிக்ஸ்க்கும் காவல் துறைக்கும் வாக்குவாதம் முற்றவே காவல் துறையினர் பென்னிக்ஸை பிடித்து பல மணி நேரம் கட்டி வைத்து அடித்ததாகவும், அவரது ஆசன வாய் உள்ளே லத்தியால் குத்தி காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் அவருக்கு திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி, சிறைக் காவலர்கள் அவரை காவல்நிலையத்துக்குப் பின்னால் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் பலியானார்.‌

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பென்னிக்சின் தந்தை ஜெயராஜ் செவ்வாய்க்கிழமை காலை மரணமடைந்தார். இந்நிலையில் தந்தை மகன் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் பொது மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக சாத்தான்குளம் டிஎஸ்பி பிரதாபன் தலைமையிலான காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம், பரபரப்பு நிலவி வருகிறது. 

இருவரது உடற்கூறு ஆய்வுகளையும் விடியோ பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com