விராலிமலையில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ. 7.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு

விராலிமலை அருகே அரசு மதுபானக் கடையின் பூட்டை உடைத்து சுமார் ரூ. 7.5 லட்சம் மதிப்பிலான மதுபானபாட்டில் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விராலிமலையில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ. 7.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு

விராலிமலை அருகே அரசு மதுபானக் கடையின் பூட்டை உடைத்து சுமார் ரூ. 7.5 லட்சம் மதிப்பிலான மதுபானபாட்டில் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை விராலிமலை ஒன்றியம் பூதகுடி ஊராட்சிக்குட்பட்ட புதுப்பட்டி கிராமத்தில் 6709  என்ற எண் கொண்ட தமிழ்நாடு மாநில வாணிப கழகம் முலம் நடத்தப்படும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் வழக்கம்போல் மதுபான கடையை திங்கள்கிழமை இரவு ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்ற நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக கடையின் பணியாளர்கள் மற்றும் விராலிமலை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 

இதையடுத்து நிகழ்விடம் சென்ற காவல்துறையினர் மற்றும் கடையின் மேற்பார்வையாளர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 7.50 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து புதுக்கோட்டையில் இருந்து மோப்ப நாய் மார்ஷல் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு இக்கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் எப்போதும் ஆள்நடமாட்டம் உள்ள தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள இந்த கடையில் கொள்ளைச் சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்தும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்தும் விராலிமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்காடு கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து சுமார் 1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற நிலையில் தற்போது விராலிமலை அருகே உள்ள புதுப்பட்டியில் அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்திருப்பது டாஸ்மாக் அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com