மாவட்டம் விட்டு மாவட்டம் போக்குவரத்திற்கு தடை: ஈரோட்டில் குறைந்த எண்ணிக்கையில் இயங்கிய பேருந்துகள்

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில்  கடந்த மார்ச் மாதம் 24 -ஆம் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.  
ஈரோட்டில் குறைந்த எண்ணிக்கையில்  இயங்கிய பேருந்துகள்.
ஈரோட்டில் குறைந்த எண்ணிக்கையில்  இயங்கிய பேருந்துகள்.



ஈரோடு: கரோனா பரவலைத் தடுக்கும் வகையில்  கடந்த மார்ச் மாதம் 24 -ஆம் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து சில தளர்வுகள் உடன் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகள் உடன் கடந்த ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டது. மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு அந்த மண்டலத்திற்குள் பேருந்து போக்குவரத்து இயக்கப்பட்டு வந்தது.  

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 13 கிளைகளில் தினமும் 800 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. அரசு 50   சதவீத பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அறிவிப்பு காரணமாக  ஈரோட்டில் முதற்கட்டமாக 260 உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.  இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் கடந்த ஜூன் 13-ஆம் தேதி முதல் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன.  மொத்தம் 270 தனியார் பேருந்துகளில் முதற்கட்டமாக 135 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் பொது போக்குவத்திற்கு வியாழக்கிழமை முதல் வரும் 30 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து வெளியூர் மாவட்ட செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. வியாழக்கிழமை ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து குறைந்த அளவே உள்ளூர் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.  

இது தெரியாமல் பலர் இன்று ஈரோடு பேருந்து  நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் கோயம்புத்தூர் சேலம், திருப்பூர் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர்.  பின்னர்தான் போக்குவரத்து அதிகாரிகள் கூறிய பிறகு அவர்களுக்கு நிலவரம் தெரியவந்தது.  இதையடுத்து அவர்கள் திரும்பிச் சென்றனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com