கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 28 புதிய வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைப்பு
By DIN | Published On : 01st March 2020 03:59 PM | Last Updated : 01st March 2020 03:59 PM | அ+அ அ- |

கொச்சி: கேரளம் மாநிலம் கொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்படவர்களுக்கு ரோட்டரி இன்டர்நேஷனல் சார்பில் கட்டி முடிக்கப்பட்ட 28 வீடுகளை ஞாயிற்றுக்கிழமை பயனாளிகளிடம் முதல்வர் பிரனாயி விஜயன் ஒப்படைத்தார்.
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோட்டரி இன்டர்நேஷனல் சார்பில் மேலும் 52 வீடுகளை கட்டுவதற்கான அடுத்த திட்டத்தையும் முதல்வர் விஜயன் துவக்கி வைத்தார். மேலும் ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3201-ன் நூற்றாண்டு திட்டங்களையும் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி ஹிபி ஈடன், காங்கிரஸ் எம்எல்ஏ பி.டி தாமஸ், மலையாள நடிகை ஆஷா சரத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.