ரயில்வே வளாகங்களிலும், ரயில்களிலும் 160 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்: ஆர்டிஐ தகவல்

2017 முதல் 2019 வரை ரயில்வே வளாகங்கள் மற்றும் ஓடும் ரயில்களில் 160-க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.
ரயில்வே வளாகங்களிலும், ரயில்களிலும் 160 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்: ஆர்டிஐ தகவல்


புதுதில்லி: 2017 முதல் 2019 வரை ரயில்வே வளாகங்கள் மற்றும் ஓடும் ரயில்களில் 160-க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 165 வழக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. 

மத்திய பிரதேசம் மாநிலம் நீமுச் நகரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ரயில்வே வளாகம் மற்றும் ரயில்களில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகள் மற்றும் அதுதொடர்பான விசாரணை குறித்த விபரங்களைக் கோரியிருந்தார்.  

அதன்படி,  2017-2019 ஆம் ஆண்டுகளில் ரயில்வே வளாகங்களில் 136 பேரும், ஓடும் ரயில்களில் 29 பேரும் என 165 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த ஆண்டு பதிவான 44 பாலியல் வன்கொடுமை வழக்குகளில், 36 சம்பவங்கள் ரயில்வே வளாகத்திலும், 8 சம்பவங்கள் ஓடும் ரயில்களிலும் நிகழந்துள்ளன. 2018 இல் பதிவான 70 பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 59 சம்பவங்கள் ரயில்வே வளாகத்திலும், 11 சம்பவங்கள் ஓடும் ரயில்களிலும் நிகழ்ந்துள்ளன. 2017 இல் பதிவான 51 பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 41 சம்பவங்கள் ரயில்வே வளாகத்திலும், 10 சம்பவங்கள் ஓடும் ரயில்களிலும் நிகழந்துள்ளன. 

பாலியல் வன்கொடுமைகளைத் தவிர பெண்களுக்கு எதிராக 1,672 குற்றங்கள் நிழ்ந்துள்ளன. அதில், ரயில்வே வளாகத்தில் 802 குற்றங்களும், ஓடும் ரயில்களில் 870 குற்றங்களும் நிகழ்ந்துள்ளன.

இந்த மூன்று ஆண்டுகளில் ரயில்வே வளாகங்கள் மற்றும் ரயில்களில் 771 கடத்தல் சம்பவங்களும், 4,718 கொள்ளை சம்பவங்கள், 213 கொலை முயற்சி சம்பவங்கள் மற்றும் 542 கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 

2017 இல் 51 ஆக இருந்த பாலியல் வன்கொடுமை வழக்குகள் 2019 இல் 44 ஆக குறைந்துள்ள நிலையில், 2018 இல் 70 ஆக உயர்ந்துள்ளது.  2019 இல் மட்டும், ரயில்வே வளாகங்களிலும், ரயில்களிலும் மொத்தம் 55,826 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன, 2017 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 71,055 ஆக இருந்தது.

ரயில்வேயில் காவல்துறை என்பது ஒரு மாநிலங்களின் காவல்துறைக்கு உட்பட்டு செயல்படும் ஒன்று, அவை குற்றங்களைத் தடுப்பது, வழக்குகளைப் பதிவுசெய்தல், ரயில்வே வளாகங்களிலும், ஓடும் ரயில்களிலும் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரித்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவை மாநில அரசுகளின் காவல்துறை மற்றும் ரயில்வே காவல்துறையின் பொறுப்பாகும். இருப்பினும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ரயில்வே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கடந்த மாதம் மாநிலங்களவையில் ரயில்வேயில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சகம், பாதிக்கப்படக்கூடிய மற்றும் அடையாளம் காணப்பட்ட வழிகள் அல்லது பிரிவுகளில், சராசரியாக 2,200 ரயில்கள் ரயில்வே பாதுகாப்பு படையால் தினமும் இயக்கப்படுகின்றன. தினமும் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து கூடுதலாக 2,200 ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன.

பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு தொடர்பான உதவிக்காக இந்திய ரயில்வேயில் 24 மணி நேரமும் செயல்படும் 182 என்ற பாதுகாப்பு உதவி எண்ணை செயல்படுத்து வருகிறது. 

பெண் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் ஆண் பயணிகள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது ரயில்வே சட்டம், 1989 இன் பிரிவு 162 ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகின்றன. 

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், முறையே மொத்தம் 1,39,422 மற்றும் 1,14,170 ஆண் பயணிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பெருநகர நகரங்களில் இயங்கும் பெண்கள் சிறப்பு ரயில்களில் பெண்கள் ரயில்வே போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக 2019 நவம்பர் வரை 2019 மேல் இயக்கப்படும் அனைத்து ரயில்பெட்டிகளிலும்,  2019 டிசம்பர் வரை 511 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் ரயில்வே முழுவதும் குற்றங்கள் குறைந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com