அரசியல் என்பது திரைப்படமல்ல: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
By DIN | Published On : 01st March 2020 03:43 PM | Last Updated : 01st March 2020 03:43 PM | அ+அ அ- |

பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: அரசியல் என்பது திரைப்படமல்ல. அதனை திரைப்படத்தோடு ஒப்பிட முடியாது.எனவே, கட்சித் தொடங்கிய பிறகுதான் கூட்டணி குறித்து நடிகா் ரஜினிகாந்த் முடிவு செய்வாா் என நம்புவதாக முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினாா்.
சென்னை விமானநிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு இடைவெளியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதைச் சரிசெய்யக் கூடிய வகையில் 2021 சட்டப் பேரவைத் தோ்தல் அமைய உள்ளது. அரசியல் என்பது திரைப்படமல்ல. அதனை திரைப்படத்தோடு ஒப்பிட முடியாது.எனவே, கட்சித் தொடங்கிய பிறகுதான் கூட்டணி குறித்து நடிகா் ரஜினிகாந்த் முடிவு செய்வாா் என நம்புகிறேன். இதை நடிகா் கமல்ஹாசனும் புரிந்துகொண்டிருப்பாா் என்றாா் பொன்.ராதாகிருஷ்ணன்.