தாய்லாந்தில் முதல் கரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவர் பலி
By DIN | Published On : 01st March 2020 04:24 PM | Last Updated : 01st March 2020 04:24 PM | அ+அ அ- |

வியட்நாம்: தாய்லாந்தில் முதல் முறையாக கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
சீனாவில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 2,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உலக நாடுகள் அனைத்தும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், தாய்லாந்தில் முதன் முறையாக கரோனா வைரஸ் தொற்று காரணமாக 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும், 42 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.