அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு பெண் ஒருவர் முதல் பலி 

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் கரோனா வைரஸ் (கொவைட்-19) தொற்றுக்கு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள்
அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு பெண் ஒருவர் முதல் பலி 

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் கரோனா வைரஸ் (கொவைட்-19) தொற்றுக்கு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் பலியாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

சீனாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிப்பு காரணமாக இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் வைரஸால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனையடுத்து உலக நாடுகள் அனைத்தும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. 

இந்நிலையில், அமெரிக்காவில் சனிக்கிழமை இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் மாநிலத்தின் சியாட்டல் புறநகர்ப் பகுதியான கிர்க்லாந்தில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வைரஸ் தொற்றுக்கு முதன் முறையாக பெண் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும், அவர் குறித்த வேறு எந்த விவரமும் வெளியாகவில்லை என்று எவர்கிரீன் ஹெல்த் மருத்துவ மையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் டிரம்ப், கரோனா வைரஸ் தாக்கிய பெண்மணி ஒருவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தி பேசினார். அப்போது, வைரஸ் தொற்றுக்கு 15 பேர் சிகிச்சை பெற்று நலம்பெற்று வருவதாகவும், யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் வலிமை தமது நாட்டுக்கு இருப்பதாகக் கூறினார். 

கடந்த 14 நாட்களில் ஈரானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டவர் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்படுவதாக துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்தார்.

கரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளான தென்கொரியா, இத்தாலி ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com