கரோனா அச்சுறுத்தல்: பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் நாட்டினர் இந்தியா வர தடை

உலக அளவில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் நாட்டினர் இந்தியா
கரோனா அச்சுறுத்தல்: பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் நாட்டினர் இந்தியா வர தடை



புதுதில்லி: உலக அளவில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் நாட்டினர் இந்தியா வருவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸின் (கொவைட்-19) தோற்றுவாயான சீனாவின் ஹூபே மாகாணத்தில், அந்த வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கல் தெரிவிக்கின்றன.

கரோனா வைரஸ், உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்குள்ளாவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து அச்சத்தை அதிகப்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் 61 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரனோ வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்திய அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்நிலையில், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாட்டினர் இந்தியா வருவதற்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வழக்கமான விசாக்கள், இ-விசாக்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக குடியுரிமைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இம்மூன்று நாடுகளை சேர்ந்தவர்களை தவிர இங்கு கடந்த 1-ஆம் தேதிக்கு பின்னர் சென்ற பிற நாட்டினருக்கும் இந்தியாவுக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வர தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கரோனா வைரஸ் தொற்று  குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தயார்நிலை மற்றும் மேலாண்மை குறித்து ஆய்வு செய்வதற்காக இந்த கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்களின் உயர்மட்டக் கூட்டத்துக்கு பின்னர் கரோனா வைரல் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகெங்கிலும் உள்ள 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், கரோனா வைரஸ் தொற்று  குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தயார்நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக நடைபெற்ற இந்த கூட்டத்தில், மத்திய சுகாதார அமைச்சகம் தனது ஆலோசனையில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் குடிமக்கள் தங்கள் ஆரோக்கியத்தை சுயமாகக் கண்காணிக்கவும், பரிந்துரைக்கப்பட்டவை மற்றும் செய்யக்கூடாதவைகளை குறித்து பின்பற்றவும் வலியுறுத்தி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com