தமிழகத்தில் புதிதாக யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

தமிழகத்தில் இருந்து கரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் சோதனைக்கு அனுப்பப்பட்ட அனைத்து ரத்த மாதிரியிலும் கரோனா வைரஸ்
தமிழகத்தில் புதிதாக யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் இருந்து கரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் சோதனைக்கு அனுப்பப்பட்ட அனைத்து ரத்த மாதிரியிலும் கரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். 

அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஓமன் நாட்டிற்கு சென்று தமிழகம் திரும்பிய காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த நபர் குணமடைந்துள்ளார். ரத்த மாதிரியை மீண்டும் பரிசோதித்ததில் அவருக்கு கரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது; அரசு சார்பில் வழங்கப்பட்ட சிறந்த சிகிச்சை முறையினாலும், அவசர கால நிலையை சமாளிக்கும் தமிழக சுகாரத்துறையின் திறமையினாலும் இத்தகைய விரைவான மீட்பு சாத்தியமாகியுள்ளது. தற்போது தமிழத்தில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை  என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

மேலும் வடகிழக்கு மாநிலத்தில் பனியாற்றிவிட்டு விட்டு தமிழகம் திரும்பிய பெரம்பலூரில் ரயில்வே ஊழியர் ஒருவரின் ரத்த மாதிரி சோதனைக்கு புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு இருந்தது.  இவரின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த சிறுவனுக்கும் கரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. மேலும், காஞ்சிபுரத்தில் கரோனா தொற்று பாதித்த இளைஞரின் உறவினர்களின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. மொத்தம் 8 பேரின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று இல்லை என்று சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் சோதனைக்கு அனுப்பப்பட்ட அனைத்து ரத்த மாதிரிகளும் நெகட்டிவ் என்று வந்துள்ளது. கரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருந்த யாருக்கும் வைரஸ் தாக்கவில்லை. அனைத்து ரத்த மாதிரிகளும் சோதனை செய்யப்பட்டுவிட்டது. எதுவும் மீதம் இல்லை. தமிழகத்தில் புதிதாக யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று இல்லை. தமிழகம் எப்போதும் போல கரோனா இல்லாமல் இருப்பதற்கான போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். 

அமைச்சரின் அறிவிப்பால் தமிழகத்தில் யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருந்தவர்களும் இதனால் நிம்மதி அடைந்துள்ளனர். 

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து குணப்படுத்தப்பட்ட காஞ்சிபுரம் இளைஞர் இன்னும் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு,  அவரின் உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு. அதன்பின் அவர், டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com