சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,158 ஆக உயர்வு

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 3,158 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,158 ஆக உயர்வு

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 3,158 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா வைரஸ் முதலில் பரவத் தொடங்கிய ஹூபே மாகாணத் தலைநகா் வூஹானில்  (கொவைட்-19), அந்த வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை அதிபா் ஷி ஜின்பிங் அறிவித்திருந்த நிலையில், வைரஸ் தொற்றுக்கு மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  3,136 இல் இருந்து 3,158 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,754  இருந்து 80,778 ஆக உயர்ந்துள்ளது. குணப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 61,475 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் ஹூபே மாகாண தலைநகரான ஹானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. குறிப்பாக தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் கடந்த ஒரே நாளில் 4,125 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் 203 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

உலக அளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18745 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  இத்தாலியில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10,149 ஆக உயர்ந்துள்ளதாகவும், 631 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானில், 8,042 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 291 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கொரியாவில்7,775 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,784 ஆக உயர்ந்துள்ளது, 33 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 1,695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 35 பேர் உயிரிழந்தனர். ஜெர்மனியில், 1,565 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2 பேர்  உயிரிழந்தனர்.  ஜப்பானில், 581 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் கப்பலில் 706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 10 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில், 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
பொலிவியா, துருக்கி, ஜமைக்கா மற்றும் டி.ஆர். காங்கோவில் முதல் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com