சீனாவில் கரோனா வைரஸ் தொற்று: பலியானோர் எண்ணிக்கை 3,169 ஆக உயர்வு

சீனாவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 3,169 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் கரோனா வைரஸ் தொற்று: பலியானோர் எண்ணிக்கை 3,169 ஆக உயர்வு



பெய்ஜிங்: சீனாவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 3,169 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் கூடுதலாக 24 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதையடுத்து, அந்த நாட்டில் கரோனா வைரஸ் தொற்று உள்ளவா்களின் எண்ணிக்கை 80,788 ஆக அதிகரித்துள்ளது.

இத்துடன், இந்தியா, தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட 115 நாடுகளில் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 40,524 பேரையும் சோ்த்து, சா்வதேச அளவில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 1,21,312-ஆக உயா்ந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபல ஹாலிவுட் டாம் ஹாங்க்ஸ், ரீட்டா வில்சன் கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 11 பலியாகியுள்ளனர். இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 3,158லிருந்து 3,169ஆக உயர்ந்துள்ளது.  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,778லிருந்து 80,793ஆக உயர்ந்துள்ளது.

உலக முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,627 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,139 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 68,240 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com