ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா வருவதற்கு தடை : டிரம்ப் அதிரடி அறிவிப்பு

கரோனா வைரஸ் தொற்றுநோயாக பரவி வருவதை அடுத்து ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா வருவதற்தான அனைத்து பயணங்களையும்
டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்


வாஷிங்டன்: கரோனா வைரஸ் தொற்றுநோயாக பரவி வருவதை அடுத்து ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா வருவதற்தான அனைத்து பயணங்களையும் 30 நாட்களுக்கு  தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக அமெரிக் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி கரோனா வைரஸின் (கொவைட்-19) தோற்றுவாயான சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூகான் நகரில் இருந்து அந்த வைரஸ் பரவத் தொடங்கியது. தற்போது அங்கு கரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கல் தெரித்தாலும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

கடந்த 3 மாதங்களில் கரோனா வைரஸ் உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தற்போது வரை உலகம் முழுவதும் 4 ,627 பேர் உயிரிழந்துள்ளனர். 1,18,129 பேருக்கு வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. 

இந்த நிலையில், கரோனா வைரஸ் தொற்றுநோயாக பரவி வருவதை அடுத்து அதனை கட்டுப்படுத்தும் விதமாக, ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா வருவதற்தான அனைத்து பயணங்களையும் 30 நாட்களுக்கும்  தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த பயணத் தடை வெள்ளிக்கிழமை இரவு முதல் நடைமுறைக்கு வருகிறது. ஆனால் இங்கிலாந்துக்கு இந்த தடை பொருந்தாது. இந்த நடவடிக்கை நாளை வைரஸ் பரவுவதைத் தடுக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். 

புதன்கிழமை இரவு வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய டிரம்ப், கரோனா வைரஸின் தோற்றுவாயான சீனாவில் இருந்து வரும் பயணிகளைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் தவறியதால்,  அங்கு கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதாக கூறினார். 

வாஷிங்டன், பிரான்சிஸ்கோவில் பொது நிகழ்ச்சிகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  வாஷிங்டனில் பொதுச் சுகாதார அவசர நிலையும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 

உலக சுகாதார அமைப்பு கரோனா வைரஸ் பாதிப்பை ஒரு தொற்றுநோயாக அறிவித்ததைத் தொடர்ந்து, இது அனைவரையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com