கரோனா உலகளாவிய நோய்த்தொற்று என உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

கரோனா வைரஸ் உலகளாவிய ஒரு நோய்த்தொற்று என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளதை அடுத்து, காரோனாவுக்கு எதிராக அவசர மற்றும்
கரோனா உலகளாவிய நோய்த்தொற்று என உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு


கரோனா வைரஸ் உலகளாவிய ஒரு நோய்த்தொற்று என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளதை அடுத்து, காரோனாவுக்கு எதிராக அவசர மற்றும் தீவிர நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து நாடுகளும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டணியோ குட்டரெஸ் அறிவுறுத்தியுள்ளார். 

கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் 114 நாடுகளுக்கு பரவியுள்ளது. இதில், 50 நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 10-க்கும் குறைவாகும். 81 நாடுகளில் இதுவரை கரோனா பாதிப்பில்லை. 

உலகம் முழுவதும் வைரஸ் தொற்றுக்கு 1,18,381 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

கரோனா வைரஸ் பரவல், உலகளாவிய பொது சுகாதார நெருக்கடி என கடந்த ஜனவரி 30 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கரோனா வைரஸ் பரவும் வேகமும் தீவிரமும், அதற்கு எதிராக போதிய நடவடிக்கைகள் இல்லாமல் இருப்பதும் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், கரோனாவை உலகளாவிய ஒரு நோய்த்தொற்று என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோல் அதானோம் அறிவித்துள்ளார்.

இதையடுத்து, கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக அவசர மற்றும் தீவிர நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து நாடுகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோல் அதானோம் கூறியுள்ளார். 

சீனா மற்றும் தென்கொரியாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுட்டிகாட்டியவர், வைரஸ் பரவல் இன்னும் கட்டுப்படுத்தக்கூடிய நிலையில்தான் உள்ளது என கூறினார். 

கரோனா வைரஸ் உலகளாவிய ஒரு நோய்த்தொற்று என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளதை அடுத்து, காரோனாவுக்கு எதிராக அவசர மற்றும் தீவிர நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து நாடுகளையும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டணியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார். 

"ஒரு தொற்றுநோயைப் பற்றிய இன்றைய அறிவிப்பு தொற்றுநோய்க்கு எதிரான நடவடிக்கைக்கான அழைப்பு என்றவர்,  வைரஸை எதிர்த்துப் போராடும்போது நாங்கள் பயத்தை வைரலாக விட முடியாது.

ஒவ்வொரு நாடும் தங்கள் மக்களைக் கண்டறிந்து, தனிமைப்படுத்தி சோதனை செய்து, சிகிச்சையளித்தால் தொற்றுநோயின் பாதிப்பை குறைத்து நாம் நீண்ட தூரம் செல்ல முடியும்." என சிறந்த விஞ்ஞானம் நமக்குச் சொல்கிறது. 

அதனால் அனைத்து அரசுகளும் உடனடியாக அதிகாரிகளை முடுக்கிவிட வேண்டும் எனவும், அவர்களின் முயற்சிகளுக்கு அனைத்து மக்களும் தங்கள் பங்கை அளிக்க வேண்டும் என ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்திய குட்டரெஸ், "தங்கள் உறவினர்களை இழந்து துன்பத்தில் உள்ள பல குடும்பங்களுக்கு எங்களது துக்கத்தையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்ளும் இந்நேரத்தில், இந்த வைரஸ் தொற்றுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய - முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், நம்பகமான சுகாதாரப் பாதுகாப்பு இல்லாதவர்கள் மற்றும் வறுமையின் விளிம்பில் உள்ளவர்கள் ஆகியோருடன் நாம் ஒற்றுமையைக் காட்ட வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் "உறுதியுடனும், களங்கம் இல்லாமலும் முன்னேறுவோம் ... இந்த பொதுவான அச்சுறுத்தலை ஒன்றுமையாக சமாளிப்போம்" என்று அன்டணியோ குட்டரெஸ் கூறியுள்ளார். 

இதற்கு முன்னர், 2009ஆம் ஆண்டில், பன்றிக் காய்ச்சல் என H1N1 குறிப்பிடப்பட்ட வைரஸ் பரவலை உலகளாவிய நோய்த்தொற்று என உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

அப்போது உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு அளவுக்கு H1N1 பாதிப்பு இருந்தது. இருப்பினும்கூட அப்போது வெளியிடப்பட்ட அறிவிப்பு, தேவையற்ற பீதியை கிளப்பியதாக விமர்சனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com