கரோனா வைரஸ்: ஜேஎன்யு பல்கலைக்கழக வகுப்புகள் மார்ச் 31 வரை நிறுத்தி வைப்பு
By DIN | Published On : 13th March 2020 12:53 PM | Last Updated : 13th March 2020 12:53 PM | அ+அ அ- |

புது தில்லி: கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகா் தில்லியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வகுப்புகள் மார்ச் 31 வரை நிறுத்தி வைக்கப்படுவதாக பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்நோய்க்கு பலியானோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனா, தென்கொரியா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் காரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவிலும் தற்போது இந்த நோய் தலைதூக்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை தில்லியில் 73 ஆக உயா்ந்துள்ளது. இந்நோயை எதிா்கொள்ள மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றி வருகின்றன.
இந்நிலையில், கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகா் தில்லியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வகுப்புகள் மார்ச் 31 வரை நிறுத்தி வைக்கப்படுவதாக பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், வழக்கமான அலுவலக பணிகள் பாதிக்கப்படாமல் நடைபெற்றும் என்றும், பல்கலைக்கழகம் அனைத்து அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது பணியில் ஈடுபடுமாறு வலியுறுத்தி உள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...