நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: பாஜக எம்.பி.க்களுக்கு மோடி உத்தரவு

அரசியல் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 
நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: பாஜக எம்.பி.க்களுக்கு மோடி உத்தரவு

புதுதில்லி: அரசியல் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டிடத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற பாஜக எம்.பி.க்கள் வாராந்திர கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கரோனா வைரஸ் தொற்றுநோய் ஒழிக்கப்படும் வரை பாஜகவினர் எந்த அரசியல் நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு கரோனா விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். இதேபோன்று பாஜக எதிர்க்கட்சியாக இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் எந்தவொரு போராட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதை எம்.பி.க்கள்  தவிர்த்துவிட்டு, தங்கள் பகுதியில் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

இதுபோன்ற நேரங்களில் எந்தவித கருத்துவேறுபாடுகளையும் வெளிப்படுத்தாமல் நாம் முழு ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். இதனை அனைவரும் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்தியாவில் இதுவரை கரோனா வைரஸ் தொற்றுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 137 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com