கரோனா: சென்னையில் 1890 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்!

கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு சென்று விட்டு சென்னை திரும்பியதாக 1890 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கரோனா: சென்னையில் 1890 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்!


சென்னை: கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு சென்று விட்டு சென்னை திரும்பியதாக 1890 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் சென்னை தேனாம்பேட்டை மற்றும் அடையார் மண்டலங்களில் அதிகயளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டவர்களில் இதுவரை யாருக்கும் கரோனா அறிகுறிகளாக இல்லை என்று  மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு சென்று விட்டு சென்னை திரும்பியவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

அந்த வகையில் சென்னையில் 1890 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தேனாம்பேட்டையில் 522 பேரும், அடையாரில் 299 பேரும் அதிகயளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், தேனாம்பேட்டையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 522 பேரில் 341 பேர் ஏற்கெனவே 28 நாட்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்துள்ளனர் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சுமார் 8 லட்சம் மக்கள்தொகை கொண்ட தேனாம்பேட்டை, திரு.வி.க நகர் பகுதியில் 88 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அடையார் மண்டலத்தில், 293 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களில் இதுவரை யாருக்கும் கரோனா அறிகுறிகளாக இல்லை என்று  மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர், மேலும் அவர்கள் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வந்ததன் அடிப்படையில் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

"இந்த நபர்களுக்கு வைரஸ் தொற்று அறிகுறிகள் இல்லை, நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மட்டுமே எடுத்து வருகிறோம்" என்று ஒரு மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

மாநகரின் வடசென்னை பகுதியான (திருவெற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை மற்றும் ராயபுரம்) ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 20 லட்சம் பேரில் 227 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எண்ணிக்கை அதிகமாக இல்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அதிகமான மக்கள்தொகை கொண்ட பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவது பயனற்றதாக இருக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

கரோனா பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவர்களில் வட சென்னையைச் சேர்ந்த பகுதிகளில் அதிகமாக இல்லை. எனவே இதுபோன்ற நிலைமை இங்கு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் வீடு வீடாக வைரஸ் தொடர்பான வெப்ப ஸ்கேனிங்கில் ஈடுபடாது என்று தெரிவித்த மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி சுகாதார ஊழியர்கள் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட தொந்தரவு உள்ளதா என ஒவ்வொரு வீடாக விசாரித்து பார்வையிடுவார்கள் என அதிகாரிகள் கூறினர். 

பகுதி வாரியாக வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை விபரம்: 
திருவெற்றியூர் - 09
மணலி - 11
மாதவரம் -16
தண்டையார்பேட்டை - 54
ராயபுரம் -137
திரு வி.க. நகர் - 88
அம்பத்தூர் - 89
அண்ணா நகர் -138
தேனாம்பேட்டை -522
கோடம்பாக்கம் -153
வலசரவாக்கம் -74
ஆலந்தூர் -110
அடையார் -293
பெருங்குடி- 103
சோழிங்கநல்லூர் - 46
மற்ற பகுதிகளில் -  47 என மொத்தம் 1890 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

தனிமைப்படுத்தப்பட்டவர்களில் இதுவரை யாருக்கும் கரோனா அறிகுறிகளாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com