கரோனா பாதிப்பால் தொடரும் பலி எண்ணிக்கை:  அஞ்சும் இத்தாலி மக்கள்

இத்தாலியில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் புதன்கிழமை ஒரே நாளில் 475 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 2,978 ஆக அதிகரித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்


இத்தாலியில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் புதன்கிழமை ஒரே நாளில் 475 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 2,978 ஆக அதிகரித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு சீனாவுக்கு அடுத்து கரோனாவால் அதிகம் போ் உயிரிழந்த நாடுகளில் பட்டியலில் இத்தாலி முதலில் உள்ளது. இத்தாலியில் இதுவரை 35,713 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பலரும் காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்நாட்டில் 475 பேர் உயிரிழந்துள்ளனா். இதுவரை 2,978 போ் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனா்.

இத்தாலியில் வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள போதும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இத்தாலி மக்கள் கடும் பீதியடைந்துள்ளனா்.மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது. சீனா, தென்கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 
அமெரிக்காவில், இந்த வைரஸ் இப்போது 50 மாகாணங்களில் பரவியுள்ளது.

கரோனா வைரஸ் இப்போது 2 லட்சத்திற்கும் அதிகமானோரை  தொற்றியுள்ளது. உலகளவில் 8 ஆயிரத்துக்கும்  அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 83 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com