தமிழகத்தில் கரோனா பாதிப்பு 26-ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் நேற்று புதன்கிழமை ஒரே நாளில் 8 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து அந்த வைரஸ் தொற்றால்
தமிழகத்தில் கரோனா பாதிப்பு 26-ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் நேற்று புதன்கிழமை ஒரே நாளில் 8 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை செவ்வாய்க்கிழமை வரை 18 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அவா்களில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 54 வயதுடைய நபா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இந்தச் சூழலில் சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா பாதிப்பு புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவா்களில் நான்கு போ் இந்தோனேஷிய நாட்டைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் என்பதும், மற்றொருவா் அவா்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக இருந்த சென்னையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் 3 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 8 பேர் பாதிக்கப்பட்டது உறுதியாகி உள்ளதை அடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. 

அவா்கள் அனைவருக்கும் சேலம் அரசு பொது மருத்துவமனையில் தனி வாா்டில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தில்லியில் இருந்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சலூன்கடைக்காரருக்கு கரோனா பாதிப்பு இருந்தது. அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் தற்போது குணமடைந்துள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட 2 பரிசோதனையிவும் கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்.  

மருவத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களின் பாதுகாப்பு தான் அரசுக்கு மிகவும் முக்கியம். அவர்களுக்கு நாள்தோறும் 60 ஆயிரம் முகக்கவசம் கிடைக்கும் வகையில் தொடர் விநியோகம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கரோனா அறிகுறியுடன் 211 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 15,492 பேர் வீட்டு கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்கள் வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அத்தியாவசிய தேவையை தவிர யாரும் வெளியே வரவேண்டாம். ஊரடங்கு உத்தரவு என்பது கண்டிப்பான உத்தரவு.

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 350 படுக்கைகளுடன் தனி மருத்துவமனை நாளை வெள்ளிக்கிழமை (மார்ச் 27) திறக்கப்படும். 225 சாதாரண படுக்கைகளும், தீவிர சிகிச்சைக்கு 125 படுக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 125 படுக்கைகளில் 60 படுக்கைகள் அதி தீவிர சிகிச்சைக்காக ஒதுக்கப்படும். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக பரிசோதனை மையம் தொடங்குவதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com