Enable Javscript for better performance
பிரபல இந்திய சமையல்கலை நிபுணர் அமெரிக்காவில் கரோனாவுக்கு பலி- Dinamani

சுடச்சுட

  

  பிரபல இந்திய சமையல்கலை நிபுணர் அமெரிக்காவில் கரோனாவுக்கு பலி 

  By DIN  |   Published on : 27th March 2020 12:05 PM  |   அ+அ அ-   |    |  

  Floyd_Cardoz


  நியூயார்க்: அமெரிக்காவில் கரோனா தொற்றுக்கு (கொவைட்-19)  பிரபல இந்திய சமையல்கலை நிபுணர் அமெரிக்காவில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 

  உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வல்லரசு நாடான அமெரிக்காவிலும் தனது கோராதாண்டவதை அதிகப்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் இதுவரை 83,672-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூயார்க் மாகாணத்தில் மட்டும் 300-க்கும் அதிகமானவர்கள் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். 

  இந்த நிலையில் நியூயார்க் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த இந்தியா மற்றும் நியூயார்க்கில் உணவகங்களை நடத்தி வரும் இந்தியாவைச் சேர்ந்த பிரபல சமையல் கலை நிபுணர் பிளாய்ட் கார்டோஸ்(59) புதன்கிழமை காலமானார் என்று அவரது நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்திள்ளது. 

  அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கார்டோஸ் மார்ச் 8 ஆம் தேதி மும்பையில் இருந்து  நியூயார்க்கிற்கு ஜெர்மனியின் பிராங்பேர்ட் வழியாக பயணம் செய்தார். ஒரு வாரத்திற்கு முன்பு நியூயார்க் நியூஜெர்சியில் மான்டக்ளேரியில் உள்ள மவுண்டன்சைட் மருத்துவமனையில் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், புதன்கிழமை சிகிச்சை பலனின்றி காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துள்ளது. 

  கார்டோஸ் இந்தியா வந்தபோது அவருடன் தொடர்பில் இருந்த நபர்களிடம், வைரஸ் தொற்றால்  கார்டோஸ் உயிரிழந்தது குறித்து தெரிவித்துள்ளோம். அவர்களுக்கு ஏதேனும் காய்ச்சல் அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் அல்லது மருத்துவ ஆலோசனைகளை பெறுங்கள் என்று தெரிவித்துள்ளோம். மேலும் இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறைக்கும் தகவல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

  மும்பையை சேர்ந்த கார்டோஸ் உயிர் வேதியியல் தொடர்பான படிப்பை முடித்த, அவரை விஞ்ஞானியாக்க அவரது பெற்றோர் ஆசைப்பட்டனர். ஆனால் கார்டோஸ் சமையல் கலை மீது அதீத ஆர்வம். இதனால் மேற்கொண்டு அவர் சமையல் கலை தொடர்பான படிப்பை பயின்றார். மும்பையிலும் சமையல் தொழில்நுட்ப பயிற்சியை தொடங்கியவர், மும்பை நட்சத்திர உணவு விடுதிகளில் பணியாற்றினார். பின்னர் சுவிட்சர்லாந்திற்கு குடிபெயர்ந்தார். அங்கு சமையல் தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டவர், நியூயார்க்கில் கிரே குன்ஸ் என்ற பிரபல சமையல்கலை நிபுணரிடம் பிரெஞ்சு, இத்தாலியன் மற்றும் இந்திய உணவு வகைகள் என பன்னாட்டு சமையல் வித்தைகளைகற்றுக்கொண்டு தனது திறமைகைகளை வளர்த்துக் கொண்டார். 

  நியூயார்க்கில் 1998 ஆம் ஆண்டு டேனி மேயர் என்பவருடன் இணைந்து உணவகம் தொடங்கினார். இந்திய மசாலா வகைகளை எல்லாம் வெளிநாட்டு உணவு வகைகளில் கலந்து சமைத்தார்.

  பின்னர் 2015 ஆம் ஆண்டு மும்பையில் சொந்தமாக உணவகங்களை தொடங்கியவர், இறப்பதற்கு முன்பாக, அதாவது மார்ச் மாத தொடக்கத்தில் மும்பையில் புதிதாக இனிப்பு கடையையும் திறந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் தான் அவர் ஜெர்மனி வழியாக விமானத்தில் அமெரிக்கா புறப்பட்டார். 

  கடந்த 2011-ம் ஆண்டில் நியூயார்க் நகரில் நடந்த சர்வதேச சமையல் போட்டியில் பங்கேற்ற கார்டோஸ், தென்னிந்திய உணவான உப்புமாவை சமைத்து, முதல் பரிசாக 110,000 டாலர்களை தட்டிச் சென்று உலகப்புகழ் பெற்றார். 

  இந்த போட்டியில் வென்றதற்காக வழங்கப்பட்ட 110,000 டாலர்களையும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் நலநிதிக்கு நன்கொடையாக வழங்கினார். அவருடைய தந்தை புற்றுநோயால், இறந்ததால், அவரது நினைவாக அந்த தொகையை நன்கொடையாக அளித்தார் என்று கார்டோஸின் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். கார்டோசுக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

  கார்டோஸ் நான்கு முறை ஜேம்ஸ் பியர்ட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். "ஒன்ஸ் ஸ்பைஸ், டூ ஸ்பைஸ்" மற்றும் "ஃபிளேர்வாலா" என்ற இரண்டு சமையல் புத்தகங்களை எழுதியவர்.

  கார்டோஸ் காலமான தகவல் அறிந்து அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளது பிராவோ மற்றும் டாப் செஃப் .

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai