உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்துக்கு உதவ முன்வரும் ஆர்வலர்கள்: வங்கிக் கணக்கு எண்கூட சொல்லத் தெரியாத மனைவி!

ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி தற்காலிக துப்புரவுப் பணியாளர் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்தது குறித்தும்,
உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்துக்கு உதவ முன்வரும் ஆர்வலர்கள்: வங்கிக் கணக்கு எண்கூட சொல்லத் தெரியாத மனைவி!


பவானி: ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி தற்காலிக துப்புரவுப் பணியாளர் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்தது குறித்தும், அவரது குடும்ப நிலை குறித்தும் தினமணி டாட்காமில் சனிக்கிழமை வெளியான செய்தியை தொடர்ந்து ஏராளமான தன்னார்வலர்கள் உதவ முன்வந்துள்ளனர். இருப்பினும் அரசு உதவியை எதிர்நோக்கி அவரது குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.

ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சியில் தற்காலிக துப்புரவுப் பணியாளராக பணியாற்றிய என்.பாலன்(46) என்பவர் கடந்த 6 ஆம் தேதி பணியில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். பணி இடத்தில் இருந்து மருத்துமனைக்கும், அங்கிருந்து அவரது வீட்டிற்கும், வீட்டிலிருந்து மயானத்துக்கும் அவரது உடல் குப்பை வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்டது.

தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வந்த பாலன் இறந்துவிட்ட நிலையில், விவசாய கூலி வேலைக்கு செல்லும் அவரது மனைவி தங்கமணிக்கு தனது இரண்டு குழந்தைகள், வயதான பாலனின் தாய் ஆகியோரை காப்பாற்றும் சுமை ஏறியுள்ளது.

இதுகுறித்து தினமணி டாட்காம் சனிக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த தங்கமணியின் 8760411270 என்ற செல்லிடபேசி எண்ணுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தன்னார்வலர்கள் 10-க்கும் மேற்பட்டோர் உதவி செய்வதாக கூறி வங்கிக் கணக்கு எண் கேட்டு வாங்கியுள்ளனர்.  

தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டிருப்பதாக கூறிய தங்கமணி, பேசுபவர்கள் வங்கிக் கணக்கு எண் கேட்பதாகவும் ஆனால் படிப்பறிவு இல்லாத என்னால் அந்த விவரத்தைக் கூட தெரிவிக்க அருகில் உள்ள உதவியை நாட வேண்டியுள்ளது. 

மேலும் தன்னார்வலர்களின் இந்த உதவி சில மாதங்களுக்கு எங்கள் குடும்பத்தினரின் பசியை ஆற்றும். ஆனால் நிரந்தரமாக எங்கள் குடும்பம் பசியில்லாத வாழ்க்கை வாழ்ந்திடவும், இரண்டு குழந்தைகளும் படிப்பை தொடரவும், எனக்கு அரசுப் பணி மற்றும் அரசு மூலம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றார்.  
 
ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்:
தூய்மைப் பணியாளர் குடும்பத்துக்கு, ரூ.50 லட்சம் இழப்பீடு மற்றும் அவரது மனைவிக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட உள்ளாட்சி பணியாளர் சங்க(ஏஐடியுசி) மாவட்ட தலைவர் சின்னசாமி மற்றும் சிஐடியு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
பாலன் குடும்பத்துக்கு உதவ விரும்புவோர் தொடர்புகொள்ள:
பாலன் மனைவி தங்கமணி செல்லிடபேசி எண்: 8760411270,  தங்கமணி வங்கிக் கணக்கு விவரம்: கனரா வங்கி, நெரிஞ்சிப்பேட்டை கிளை, வங்கிக் கணக்கு எண்: 4258101000759, ஐஎப்எஸ்சி கோடு - CNRB0004258.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com