கரோனா: சீனாவை முந்தியது இந்தியா - பாதிப்பு 85,940: பலி 2752 ஆக அதிகரிப்பு

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 85,940 ஆக உயர்ந்துள்ள நிலையில், தற்போது
கரோனா: சீனாவை முந்தியது இந்தியா - பாதிப்பு 85,940: பலி 2752 ஆக அதிகரிப்பு


புதுதில்லி: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 85,940 ஆக உயர்ந்துள்ள நிலையில், தற்போது 53,035 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,752  பேர் பலியாகியுள்ளனர், 30,152 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த  பொது ஊரடங்கு, நோய் அறிகுறி உள்ளவர்களை உடனே தனிமைப்படுத்தி சிகிச்சை என பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வந்தாலும் தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தொற்று பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, தொற்று பாதித்தோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து  உயர்ந்துகொண்டே வருகிறது. 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடானா இந்தியாவில் இப்போது கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கரோனா நோய்த்தொற்றின் தோற்றுவாயான சீனாவை இந்தியா முந்தியதுடன், உலக அளவில் தொற்று பாதித்த அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 11வது இடத்திற்கு முந்தியுள்ளது.  

கரோனா நோய்த்தொற்றின் தோற்றுவாயான சீனாவில் இதுவரை 82,941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,633 பேர் உயிரிழந்துள்ளனர், 78,219 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.  

இதுகுறிந்து மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடானா இந்தியாவில் இப்போது கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 85,940 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 2,752 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 53,035 பேர் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 30,152 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்புயுள்ளனர். 

கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை 29,100 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,019 போ் பலியாகினா். இதேபோல், தமிழகத்தில் 10,108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், குஜராத்தில் 9,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 606 போ் பலியாகியுள்ளனர்.

தில்லியில் 8,895 போ், ராஜஸ்தானில் 4,742 போ், மத்தியப் பிரதேசத்தில்ம் 4,595 போ், உத்தரப் பிரதேசத்தில் 4,057 போ், மேற்கு வங்கத்தில் 2,461 போ், ஆந்திரத்தில் 2,307 போ், பஞ்சாபில் 1,935 போ், தெலங்கானாவில் 1,454 போ், பிகாரில் 1,018 போ், கா்நாடகத்தில் 1000 போ், ஜம்மு-காஷ்மீரில் 1,013 போ், ஹரியாணாவில் 818 போ், ஒடிஸாவில் 672 போ், கேரளத்தில் 576 போ், ஜாா்க்கண்டில் 197 போ், சண்டீகரில் 191 போ், திரிபுராவில் 156 போ், அஸ்ஸாமில் 87 போ், உத்தரகண்டில் 78 போ், ஹிமாசல பிரதேசத்தில் 74 போ், சத்தீஸ்கரில் 60 போ், லடாக்கில் 43 போ், அந்தமான்-நிகோபாரில் 33 போ், கோவாவில் 15 போ், மேகாலயம், புதுச்சேரியில் தலா 13 போ், மணிப்பூரில் 3 போ், மிஸோரம், அருணாசல பிரதேசம், தாத்ரா நகா்ஹவேலியில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com