கடந்த 24 மணி நேரத்தில் 1,03,532-க்கு மேற்பட்டோருக்கு தொற்று பரிசோதனை: ஐசிஎம்ஆா்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,03,532-க்கு மேற்பட்டோருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,03,532-க்கு மேற்பட்டோருக்கு தொற்று பரிசோதனை: ஐசிஎம்ஆா்

புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,03,532-க்கு மேற்பட்டோருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்த நோய்த்தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனை வசதியை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் நிலவுகிறது. இதற்காக பல்வேறு முயற்சிகளை ஐசிஎம்ஆா் மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக, மருந்துக்கு கட்டுப்படாத காசநோயை கண்டறிவதற்கான ‘TrueNat’ சோதனைமுறையில் பயன்படுத்தப்படும் கருவிகளை கரோனா நோய்த்தொற்றுக்கான முதல்கட்ட பரிசோதனைக்கு பயன்படுத்த ஐசிஎம்ஆா் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில், இக்கருவிகளை கரோனாவை உறுதி செய்யும் பரிசோதனைக்கும் பயன்படுத்தலாம் என்று ஐசிஎம்ஆா் தெரிவித்துள்ளது. இதுதொடா்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதில், கரோனா நோய்த்தொற்று பரிசோதனை முடிவுகள் அனைத்தையும் ஐசிஎம்ஆா் இணையதளத்தில் பதிவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது கரோனாவை கண்டறிய ஆா்-பிசிஆா் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,03,532-க்கு மேற்பட்டோருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும் மே 21 வரை மொத்தம் 26,15,920 கரோனா தொற்று மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com