சங்ககிரி: அதிமுக சார்பில் 500 கூலித்தொழிலாளர்களுக்கு உணவுப்பொருள்கள் வழங்கல்
By DIN | Published On : 27th May 2020 12:43 PM | Last Updated : 27th May 2020 12:43 PM | அ+அ அ- |

அதிமுக சார்பில் சங்ககிரி ஒன்றிய மாணவரணி செயலர் கே.வெங்கடாஜலம் நாரணப்பன்சாவடியில் உள்ள கூலித்தொழிலாளர்களுக்கு புதன்கிழமை அரிசி உள்ளிட்ட உணவுப்பொருள்களை வழங்குகிறார்.
சங்ககிரி: அதிமுக சார்பில் சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் 500 கூலித்தொழிலாளர்களுக்கு அரிசி மற்றும் உணவுப்பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றன.
கரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு கடந்த மார்ச் 24 -ஆம் தேதி மாலை 6 மணி மே 31 -ஆம் தேதி வரை பொது முடக்கம் அறிவித்துள்ளன. அதனையடுத்து தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவினையடுத்து அதிமுக சார்பில் சமூக இடைவெளிக்காக நாரணப்பன்சாவடி, தாசநாயக்கன்பாளையம், அன்.செட்டிப்பட்டி ஆகிய மூன்று பகுதிகளில் உள்ள 500 கூலித்தொழிலாளர்களுக்கு தலா 10 கிலோ அரிசி உள்ளிட்ட உணவுப்பொருள்களை சங்ககிரி ஒன்றிய மாணவரணி செயலர் கே.வெங்கடாஜலம் தலைமை வகித்து வழங்கினார்.
சங்ககிரி ஒன்றியச் செயலர் என்சிஆர். ரத்தினம், ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவி எம்.மகேஸ்வரிமருதாசலம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஏ.பி.சிவக்குமாரன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சரஸ்வதி, அரசு வழக்குரைஞர் ஆர்.சுப்ரமணி, நிர்வாகிகள் ஈஸ்வரன், சேகர், மோரூர் கிழக்கு ஊராட்சி மன்றத்துணைத்தலைவர் தனலட்சுமி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...