இந்திய ஆசிரியர் அபுதாபியில் கரோனா தொற்றுக்கு பலி
By DIN | Published On : 27th May 2020 02:08 PM | Last Updated : 27th May 2020 02:08 PM | அ+அ அ- |

அபுதாபி: அபுதாபியில் உள்ள சன்ரைஸ் பள்ளியில் இந்தி ஆசிரியராக பணியாற்றி வந்த இந்திய ஆசிரியர் ஒருவர் கரோனா தொற்று பாதிப்பால் பலியானார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது மறைவு பள்ளியின் நிர்வாகம் மற்றும் மாணவர்களை மிகுந்த தூயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த அனில் குமார் (50) மே 24 ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார்.
இந்தியாவைச் சேர்ந்தவர் அனில் குமார் (50). இவர் அபுதாபியில் உள்ள சன்ரைஸ் பள்ளியில் இந்திய ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 7 ஆம் தேதி தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் , கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை (மே 24) அனில் குமார் சிகிச்சை பலனின்றி காலமானார்.
ஆசிரியர் அனில் குமாரின் மறைவு பள்ளி நிர்வாகம், நிர்வாகிகள் மற்றும் பிற ஆசிரியர்கள், மாணவர்களை மிகுந்த தூயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அனில் குமார் மிகவும் துடிப்பான ஆசிரியர். சக ஆசிரியர்களிடமும் பண்புடன் பழகியவர். பாடங்களை கற்ப்பிப்பதில் ஆக்கப்பூர்வமான அம்சத்தை கொண்டு வந்தவர். அவரது வகுப்புகளில் கலந்துகொள்வது சுவாரஸ்யமாக இருக்கும். மாணவர்களுக்கு சிறந்த ஊக்குவிப்பு அளித்து கற்பித்தவர். அவர் இந்தி துறைக்கு ஒரு பெரிய பலமாகவும் ஆதரவாகவும் இருந்தவரை இழந்துள்ளதாகவும், அவரது குடும்பத்தினர்களுக்கு இரங்கலை தெரிவிப்பதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் "அவரது குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் எங்கள் பிரார்த்தனைகள் மற்றும் உண்மையான இரங்கல் மற்றும் அவர்களின் வாழ்க்கையின் இந்த சவாலான கட்டத்தை சகித்துக்கொள்ளவும் எதிர்கொள்ளவும் கடவுள் பலம் அளிப்பார். ” என்று தெரிவித்துள்ளது.
அனில் குமாருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மனை ரஜினியும் அதே பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...