உலக அளவில் கரோனா தொற்று பாதிப்பு 59 லட்சத்தை கடந்தது!

உலக அளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 59,05,846 -ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இறப்புகளும் 3,62,024-க்கும் அதிகமாகிவிட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வாஷிங்டன்: உலக அளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 59,05,846 -ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இறப்புகளும் 3,62,024-க்கும் அதிகமாகிவிட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 59,05,846 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 3,62,024-ஆகவும் அதிகரித்துள்ளது, 2,579,877 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 29,09,973 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 53,972 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று பல்கலைக்கழக கணினி அறிவியல் மற்றும் பொறியியல் மையம் தெரிவித்துள்ளது.

தற்போது, அமெரிக்காவில் 17,68,461 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,01,573 பேர் பலியாகியுள்ளனர். தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளன. அதனைத்தொடர்ந்து 4,38,238 நோய்த்தொற்று பாதிப்புடன் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து ரஷ்யா 379,051 பேர், இங்கிலாந்து 2,70,508, ஸ்பெயின் 2,37,906, இத்தாலி 2,31,906, பிரான்ஸ் 1,86,384, ஜெர்மனி 1,82,196, இந்தியா1,65,799, துருக்கி 1,60,979, ஈரான் 1,43,849 மற்றும் பெரு 1,41,779 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பலி எண்ணிக்கையை பொறுத்தவரை, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக  37,919 பலியுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்தில் தொடர்கிறது, இது ஐரோப்பாவில் மிக அதிகமான இறப்பாகும்.  

10,000 க்கும் அதிகமான இறப்புகளைக் கொண்ட மற்ற நாடுகளில் இத்தாலியில் 33,142 பேர், பிரான்ஸ் 28,665, ஸ்பெயின் 27,119 மற்றும் பிரேசில் 26,754 பேர் பலியாகியுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com