நிலவில் சூரிய ஒளி படும் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை அமெரிக்காவின் தேசிய விண்கல மற்றும் விண்வெளி ஆய்வு மையம் (நாசா) திங்கள்கிழமை உறுதி செய்துள்ளது.
நாசாவின் பறக்கும் ஆய்வக விமானமான சோஃபியா மேற்கொண்ட ஆய்வில் நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாசா அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
"சந்திரனின் தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள, பூமியிலிருந்து தெரியும் மிகப் பெரிய பள்ளங்களில் ஒன்றான ‘கிளாவியஸ்’ பள்ளத்தில் நீரின் மூலக்கூறுகளை சோஃபியா கண்டறிந்துள்ளது" என்று நாசா தெரிவித்துள்ளது.
மேலும், சந்திரனில் இவ்வாறு காணப்படும் தண்ணீர் அதிகளவில் இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சந்திரயான் -1 விண்கலம் கடந்த 2009 ஆம் ஆண்டில் சந்திரனின் மேற்பரப்பில் முதன்முதலில் தண்ணீரைக் கண்டுபிடித்தது. இருப்பினும், ஆராய்ச்சியாளர்களால், அது நீரின் மூலக்கூறா அல்லது ஹைட்ராக்சில் மூலக்கூறா என கணிக்க முடியவில்லை.
தற்போது நிலவில் தண்ணீர் இருப்பை நாசா உறுதி செய்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


