லே விமான நிலையத்தில் புதிய முனையம் : ஏஏஐ அறிவிப்பு
By PTI | Published On : 11th September 2020 04:05 PM | Last Updated : 11th September 2020 04:05 PM | அ+அ அ- |

லே விமான நிலையம்
லே விமான நிலையத்தில் ஆண்டிற்கு 20 லட்சம் பயணிகளைக் கையாளும் விதமாக புதிய முனையம் கட்டப்படும் என இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய விமான நிலைய ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
தற்போதுள்ள விமான நிலையத்தின் முனையம் மூலம் ஆண்டிற்கு 9 லட்சம் பயணிகளைக் கையாள முடிகின்றது.
போக்குவரத்து வளர்ச்சி மற்றும் தேவையை பூர்த்தி செய்ய, நவீன வசதிகளுடன் கூடிய அதிநவீன புதிய முனைய கட்டடத்தை ரூ. 480 கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றது.
புதிய முனையத்தின் கட்டுமானப் பணிகள் டிசம்பர் 2022 க்குள் முடிவடையும், மேலும் இந்த முனையம் மூலம் ஆண்டுதோறும் 20 லட்சம் பயணிகளைக் கையாள முடியும்.
கட்டடம் நவீன நெறிமுறைகளுடனும், பண்டைய புத்த கால வடிவமைப்பை பிரதிபலிக்கும் விதமாகவும் கட்டப்பட்டு வருகின்றது என குறிப்பிட்டிருந்தது.
லேவில் உள்ள குஷோக் பாகுலா ரின்போசே விமான நிலையம் சராசரி கடல் மட்டத்திலிருந்து 3,256 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G