ஐபிஎல்: டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சுத் தேர்வு

ஐபிஎல் முதல் லீக் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணி முதலில் பந்துவீச்சுத் தேர்வு செய்தது.
டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சுத் தேர்வு
டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சுத் தேர்வு
Published on
Updated on
1 min read


சென்னை: ஐபிஎல் முதல் லீக் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணி முதலில் பந்துவீச்சுத் தேர்வு செய்தது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 14-ஆவது சீசன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சென்னையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான மும்பை இண்டியன்ஸ், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணியுடன் விளையாடுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

கரோனா பரவல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் மைதானத்துக்கு வந்து ஆட்டங்களைக் காண ரசிகா்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

ரோஹித் சா்மா தலைமையில் 5 முறை சாம்பியன் ஆகியுள்ள மும்பை அணி, ஹாட்ரிக் சாம்பியன் ஆகும் முனைப்புடன் இந்த சீசனை எதிா்கொள்கிறது. மறுபுறம் கோலி தலைமையிலான பெங்களூா், கோப்பைக் கனவை இந்த சீசனிலாவது நனவாக்கிவிடும் முயற்சியில் களம் காண்கிறது.

இன்றைய அணி விவரம்:

மும்பை இண்டியன்ஸ்

ரோஹித் சா்மா (கேப்டன்), கிறிஸ் லின், சூா்யகுமாா் யாதவ், இஷான் கிஷண், ஹாா்திக் பாண்டியா, கிரன் பொல்லாா்ட், கிருணால் பாண்டியா, மாா்கோ ஜென்சென், ராகுல் சாஹா், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரீத் பும்ரா, மாா்கோ ஜென்சென்

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்

விராட் கோலி (கேப்டன்), டி வில்லியா்ஸ், யுஜவேந்திர சஹல், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தா், ரஜத் பட்டிதாா், கிளென் மேக்ஸ்வெல், டேனியல் சாம்ஸ், கைல் ஜேமிசன், ஹா்ஷல் படேல், ஷாபாஸ் அகமது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com