
மத்திய பிரதேசத்தில் கரோனா தடுப்பு பணிகளுக்கு எதிரான தோல்வியை மறைக்க தவறாக வழிநடத்துகிறார்கள் என முன்னாள் முதல்வர் கமல்நாத் குற்றம்சாட்டியுள்ளர்.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில், மத்திய பிரதேசத்திலும் நாள்தோறும் 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கமல்நாத் தெரிவித்திருப்பது,
கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை தகனம் செய்யும் முறை குறித்து இன்று பத்திரிகைகளில் வெளியான பதிவுகள் சொல்கின்றன. அவர்களின் தோல்வியை மறைக்க அனைவரையும் தவறாக வழிநடத்துகிறார்கள். பரிசோதனை குறைவாக இருக்கும் சூழலிலேயே, நாள்தோறும் 9 ஆயிரம் பேருக்கு கரோனா கண்டறியப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.