தில்லியைவிட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்
தில்லியைவிட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்

தில்லியைவிட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்

கரோனா தொற்று திடீரென அதிகரித்ததையடுத்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தோடு தில்லியைவிட்டு வெளியேறி வருகின்றனர். 
Published on

கரோனா தொற்று திடீரென அதிகரித்ததையடுத்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தோடு தில்லியைவிட்டு வெளியேறி வருகின்றனர். 

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மீண்டும் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதித்து வருகின்றனர். 

அதன்படி, தில்லியில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து இரவுநேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாள்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் முழுப் பொதுமுடக்கம் அறிவிக்கபட்டுவிடுமோ என்று அச்சத்தால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தில்லியைவிட்டு அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர். 

இதனால், தில்லி ஆனந்த் விஹார் பேருந்து முனையம் முன்பு கடும் போக்குவரத்து நெறிசல் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com