

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கின் போது தேவையின்றி வெளியே சுற்றினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், நாளை முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில்,
முழு ஊரடங்கின் போது தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். தெருக்களில் சமூக இடைவெளி இல்லாமல் நிற்பதையும் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.