தமிழகத்தில் பனை மரங்களை வெட்ட இனி மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்

தமிழகத்தில் பனை மரங்களை வெட்ட நேரிட்டால் இனி மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறுவது கட்டாயம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார். 
தமிழகத்தில் பனை மரங்களை வெட்ட இனி மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் பனை மரங்களை வெட்ட நேரிட்டால் இனி மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறுவது கட்டாயம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார். 

தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. சட்டப்பரேவையில் வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். 

அப்போது பேசிய அவர், வேளாண் துறை வேளாண்மை - உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு இந்த நிதிநிலை அறிக்கையை காணிக்கையாக்குகிறேன். விவசாயிகளிடம் கருத்து கேட்ட பின்பே இந்த வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, கோவை, கிருஷ்ணகிரி, திருச்சி மாவட்ட விவசாயிகளிடம் கருத்துக்களைக் கேட்டறிந்தேன்.  உணவு தண்ணிறவை தமிழகம் ஓரளவு எட்டி விட்டது. 

ஊரக இளைஞர் வேளாண்  திறன் மேம்பாட்டு இயக்கம் சார்பாக,  2500 இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

 ரேசன் கைடகள் மூலம் பனை வெல்லம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தவிர்க்க முடியாத காரணங்களால் ஏரிக் கரைகளிலும், சாலையோரங்கலிலும் மரங்களை வெட்ட நேரிட்டால் அதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதையப் பெறுவது கட்டாயம். 

குறைந்து வரும் பனை மரங்களை காக்கும் நோக்கத்தில் 30 மாவட்டங்களில் 76 லட்சம் பணை விதைகளும், ஒரு லட்சம் மனை மரக் கன்றுகளும் முழு மானியத்தில் விநியோகம் செய்யப்படும்.பனை மேம்பாட்டு இயக்கத்தை செயல்படுத்த  ரூ. 3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்''என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com