ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

சென்னை ரயிலில் 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

சேலம் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 3 கிலோ தங்க நகைகளை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

News image
சென்னை ரயிலில் 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல்
Updated On :9 பிப்ரவரி 2021, 12:12 pm

DIN

சேலம்: சேலம் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 3 கிலோ தங்க நகைகளை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ரயிலில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் உரிய ஆவணங்களின்றி கடத்தி செல்லப்படுவதாக ரயில்வே காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

அந்தவகையில்,சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் சென்னையில் இருந்து சேலம் வழியாக கோவை செல்லும் விரைவு ரயில் வந்தது.

அப்போது சந்தேகத்திற்கு இடமான இருவரை பிடித்து விசாரித்தனர். இதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாகீரத் (32) என்பவரிடம் சுமார் ஒன்றரை கிலோ அளவிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிவ்ராஜ் (22) என்பவரிடம் இருந்து 1.69 கிலோ எடையுள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரிடம் நகைகளுக்கு போதிய ஆவணங்களின்றி இருந்ததைக் கண்டறிந்த ரயில்வே போலீஸார் சுமார் 3.14 கிலோ எடை கொண்ட தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பாகீரத், சிவ்ராஜ் ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர். தொடர் விசாரணை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.