

உள்நாட்டு விமானங்களில் ஜனவரி 2020 முதல் தற்போது வரை 77 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
கரோனா காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் விமானம் இயக்குவதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் பயணிகளின் எண்ணிக்கை கடந்த 10 மாதங்களாக குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், இந்தாண்டு தொடக்கம் முதல் தற்போது வரை 77.34 லட்சம் பயணிகள் உள்நாட்டு விமானங்களில் சென்றுள்ளதாக விமானப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இதே காலக்கட்டத்தில் கடந்தாண்டு 127.83 லட்சம் பேர் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.