சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: பிரதமர் இன்று மாலை ஆலோசனை

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் நடத்தவுள்ளார்.
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: பிரதமர் இன்று மாலை ஆலோசனை

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் நடத்தவுள்ளார்.

கரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெற இருந்த சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தோ்வை ரத்து செய்தும், மே 4-ஆம் தேதி முதல் நடைபெற இருந்த பிளஸ் 2 தோ்வுகளை ஒத்திவைத்தும் சிபிஎஸ்இ அறிவித்தது.

இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், ஓரிரு நாள்களில் முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இதையடுத்து, பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை மத்திய கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாநில பிரதிநிதிகளுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

இந்த ஆலோசனைக்கு பிறகு பிளஸ் 2 தேர்வு நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com