மதுரை எய்ம்ஸ் பணிகள்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மதுரை தோப்பூரில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று அடிக்கல் நாட்டிய நிலையில், இன்னும் கட்டுமானப் பணிகள் தொடங்காததால் விரைந்து பணிகளை முடிக்க பிரதமரிடம் தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,
மதுரையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையைத் தொடங்குவதற்காக 27.1.2019 அன்று பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இம்மருத்துவமனைக்காக தலைவர் மற்றும் செயல் இயக்குநர் நியமிக்கப்பட்டு சில குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கான நிலம் ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்ட நிலையில், இவ்விடத்திக் மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்திற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இப்பணிகளை விரைந்து தொடங்க வேண்டுமென்றும், இதற்கான நியமிக்கப்பட்டுள்ல அலுவலர்களுக்கு பணிகளைச் செயல்படுத்துவதற்கான முழு அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டுமென்றும் பிரதமருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...